Tuesday, July 26, 2011

உத்தம புத்திரன் - கண் இரண்டில்


கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே என் இரவின் நிலவே
உன் அருகில் வரவே நீ தருவாய் வரமே ஓஓஓ...
ஊருக்குள்ள கோடி பொண்ணு யாரையும் நெனைக்கலையே
உந்தம் முகம் பார்த்த பின்னே ஏதும் பிடிக்கலையே
உன்னுடைய பார்வையில என் உடம்பு வேகுதடி
பக்கதுல நீ இருந்தா என் வயசு நோகுதடி
கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே

ஓஓஓ...ஏதோ ஒன்னு சொல்ல என் நெஞ்சு குழி தள்ள
நீ பொதி வச்ச ஆசையெல்லாம் கண் முன்னே தள்ளாட
கண்ணாமூச்சி ஆட்டம் என் கண்ணுக்குள்ளே ஆட
நீ சொல்லும் சொல்ல கேட்காமலே உந்தம் உள்ளம் திண்டாட
உள்ளுக்குள்ள பட படக்க நெஞ்சுக்குள்ள சிறகடிக்க
காலு ரெண்டும் ரேக்க கட்டி மேலே கீழே பர பறக்க
பட்டு பூச்சி பட்டாம் பூச்சி ஆனேனே ...............

ஹ்ம்ம்.. ஹ்ம்ம்.. ஹ்ம்ம்...
உன் முத்து முத்து பேச்சு என் சங்கீதம ஆச்சு
உன் சுண்டு விரல் தீண்டயிலே நின்னு போச்சு ஏன் மூச்சு
பஞ்சு மெத்த மேகம் அதில் செஞ்சு வச்ச தேகம்
நீ தூரத்தில் நின்னா கூட பொங்கிடுதே ஏன் மோகம்
முட்ட கண்ணு மொழி அழகில் கொத்தி கொத்தி தின்னவளே
சிக்கி கிட்ட என் மனச ஊற வச்சு தொவச்சவளே
ஆத்துக்குள்ள அம்மி கள்ள போனேனே.......
ஊருக்குள்ள கோடி பொண்ணு யாரையும் நெனைக்கலையே
உந்தம் முகம் பார்த்த பின்னே ஏதும் பிடிக்கலையே
உன்னுடைய பார்வையில என் உடம்பு வேகுதடி
பக்கதுல நீ இருந்தா என் வயசு நோகுதடி
கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே என் இரவின் நிலவே
உன் அருகில் வரவே நீ தருவாய் வரமே