Wednesday, September 21, 2011

காட்டுக்குயிலு மனசுக்குள்ளே - தளபதி

கட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கொண்ணும் பஞ்சமில்ல பாடத்தான்
கவலைக்கட்டு விட்டுப்புட்டு தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு ஆடத்தான்
எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ சத்தத்திலே
ஒண்ணான நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே

(காட்டுக்குயிலு)

போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசையெல்லாம் சுட்டுத்தள்ளு
புதுசா இப்பப் பொறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா
பயணம் எங்கே போனாலென்ன பாதை நூறு ஆனாலென்ன
தோட்டம் வெச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா டோய்
ஊதக் காத்து வீச ஒடம்புக்குல்ள கூச
குப்ப கூடம் பத்தவச்சுக் காயலாம்
தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
பொங்கப் பான வெள்ளம் போலப் பாயலாம்
அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள்தான் ஹோய்

(காட்டுக்குயிலு)

பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன
உறவுக்கெல்லாம் கவலப்பட்ட ஜன்மம் நானில்ல
பாசம் வெக்க நேசம் வெக்க தோழன் உண்டு வாழவெக்க
அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே
உள்ளமட்டும் நானே என் உசிரக் கூடத்தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்
என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு
நட்பைக் கூடக் கற்பைப் போல எண்ணுவேன்
சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகம் இட்டுத் தாளம் இட்டுப்
பாட்டுப் பாடும் வானம்பாடி நாந்தான் ஹோய்

(காட்டுக்குயிலு)

Tuesday, July 26, 2011

உத்தம புத்திரன் - கண் இரண்டில்


கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே என் இரவின் நிலவே
உன் அருகில் வரவே நீ தருவாய் வரமே ஓஓஓ...
ஊருக்குள்ள கோடி பொண்ணு யாரையும் நெனைக்கலையே
உந்தம் முகம் பார்த்த பின்னே ஏதும் பிடிக்கலையே
உன்னுடைய பார்வையில என் உடம்பு வேகுதடி
பக்கதுல நீ இருந்தா என் வயசு நோகுதடி
கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே

ஓஓஓ...ஏதோ ஒன்னு சொல்ல என் நெஞ்சு குழி தள்ள
நீ பொதி வச்ச ஆசையெல்லாம் கண் முன்னே தள்ளாட
கண்ணாமூச்சி ஆட்டம் என் கண்ணுக்குள்ளே ஆட
நீ சொல்லும் சொல்ல கேட்காமலே உந்தம் உள்ளம் திண்டாட
உள்ளுக்குள்ள பட படக்க நெஞ்சுக்குள்ள சிறகடிக்க
காலு ரெண்டும் ரேக்க கட்டி மேலே கீழே பர பறக்க
பட்டு பூச்சி பட்டாம் பூச்சி ஆனேனே ...............

ஹ்ம்ம்.. ஹ்ம்ம்.. ஹ்ம்ம்...
உன் முத்து முத்து பேச்சு என் சங்கீதம ஆச்சு
உன் சுண்டு விரல் தீண்டயிலே நின்னு போச்சு ஏன் மூச்சு
பஞ்சு மெத்த மேகம் அதில் செஞ்சு வச்ச தேகம்
நீ தூரத்தில் நின்னா கூட பொங்கிடுதே ஏன் மோகம்
முட்ட கண்ணு மொழி அழகில் கொத்தி கொத்தி தின்னவளே
சிக்கி கிட்ட என் மனச ஊற வச்சு தொவச்சவளே
ஆத்துக்குள்ள அம்மி கள்ள போனேனே.......
ஊருக்குள்ள கோடி பொண்ணு யாரையும் நெனைக்கலையே
உந்தம் முகம் பார்த்த பின்னே ஏதும் பிடிக்கலையே
உன்னுடைய பார்வையில என் உடம்பு வேகுதடி
பக்கதுல நீ இருந்தா என் வயசு நோகுதடி
கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே என் இரவின் நிலவே
உன் அருகில் வரவே நீ தருவாய் வரமே

Saturday, June 18, 2011

கோ - என்னமோ ஏதோ

Yeah... Say What...  
என்னமோ ஏதோ, எண்ணம் திரளுது கனவில் 
வண்ணம் திரளுது நினைவில், கண்கள் இருளுது நனவில் 
என்னமோ ஏதோ, முட்டி முளைக்குது மனதில் 
வெட்டி எறிந்திடும் நொடியில், மொட்டு அவிழுது கொடியில்

ஏனோ குவியமில குவியமில ஒரு காட்சி பீடை 
ஓஹ் ஹோ... உருவமில உருவமில நாளை 
ஏனோ குவியமில குவியமில ஒரு காட்சி பீடை  
ஓஹ் ஹோ... அரைமனதாய் விடியிது என் காலை 

என்னமோ ஏதோ, மின்னிமறையுது  விழியில் 
அண்டி அகலுது வழியில், சிந்தி சிதறுது விழியில் 
என்னமோ ஏதோ, சிக்கி தவிக்குது மனதில் 
ரெக்கை விரிக்குது கனவில், விட்டு பறக்குது தொலைவில் 

ஏனோ குவியமில குவியமில ஒரு காட்சி பீடை 
ஓஹ் ஹோ... உருவமில உருவமில நாளை... 
ஏனோ குவியமில குவியமில ஒரு காட்சி பீடை 
ஓஹ் ஹோ... அரைமனதாய் விடியிது நாளை 

நீயும் நானும் எந்திரமா, யாரோ செய்யும், மந்திரமா பூவே 

முத்தமிட்ட மூச்சு காற்றில், பட்டு பட்டு கேட்டு போனேன் 
பக்கம் வந்து நிற்கும் போது, திட்டமிட்டு எட்டி போனேன் 
நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும் 
அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் அச்சாகும் 
சிரிப்பால் என்னை நீ சிதைத்தாய் போதும் 

ஏதோ, எண்ணம் திரளுது கனவில் 
வண்ணம் திரளுது நினைவில், கண்கள் இருளுது நனவில் 
என்னமோ ஏதோ, முட்டி முளைக்குது மனதில் 
வெட்டி எறிந்திடும் நொடியில், மொட்டு அவிழுது கொடியில் 
நீயும் நானும் எந்திரமா, யாரோ செய்யும், மந்திரமா பூவே 

Let's Go.. Wow.. Wow..
உன்காளின் தமிழச்சி, என்னமோ ஏதோ You're Lookin So Black
மறக்க முடியலையே என் மனம் அன்று 
உன் மனசோ Lovely
இப்படியே இப்ப உன் அருகில் நானு வந்து சேரவா இன்று 

(Lady Looking Like A Cindrella Cindrella Naughty லுக்கு விட்ட தென்றலா
Lady Looking Like A Cindrella Cindrella என்னை வட்டம் இடும் வெண்ணிலா)
(Lady Looking Like A Cindrella Cindrella Naughty லுக்கு விட்ட தென்றலா 
Lady Looking Like A Cindrella Cindrella என்னை வட்டம் இடும் வெண்ணிலா)

சுத்தி சுத்தி உன்னை தேடி விழிகள் அலையும் அவசரம் ஏனோ 
சத சத நெரிசலில் உன் சொல் செரிகள் அறியும்  அதிசயம்  ஏனோ 
கனாகான தானே பெண்ணே கண் கொண்டு வந்தேனோ 
வினா காண விடையும் காண கண்ணீரும் கொண்டேனோ 
நிழலை திருடும் மழலை நானோ 

ஏதோ, எண்ணம் திரளுது கனவில் 
வண்ணம் திரளுது நினைவில், கண்கள் இருளுது நனவில் 
ஓஹ் ஹோ... ஏதோ, முட்டி முளைக்குது மனதில் 
வெட்டி எறிந்திடும் நொடியில், மொட்டு அவிழுது கொடியில் 

(ஏனோ குவியமில குவியமில ஒரு காட்சி பீடை 
ஓஹ் ஹோ.. உருவமில உருவமில நாளை...
ஏனோ குவியமில குவியமில ஒரு காட்சி பீடை 
ஓஹ் ஹோ... அரைமனதாய் விடியிது என் காலை...)

(ஏனோ குவியமில குவியமில ஒரு காட்சி பீடை 
ஓஹ் ஹோ.. உருவமில உருவமில நாளை...
ஏனோ குவியமில குவியமில ஒரு காட்சி பீடை 
ஓஹ் ஹோ... அரைமனதாய் விடியிது என் காலை...)

ஹ்ம்ம்.... ஹ்ம்ம்...  ...ஏதோ...